இந்த ஸ்கூட்டர் தாராளமான ஃபுளோர் போர்டு, அகலமான இருக்கை அமைப்பு, இருக்கை அடியில் அதிகப்படியான ஸ்டோரேஜ் உட்பட பெரும்பாலான பாகங்கள் SR 125 ஸ்கூட்டரில் இருந்து பெற உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் மிக சொகுசான பயன அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.
இதுகுறித்து Bikewale தளம் வெளியிட்டுள்ள செய்தியில் புதிய பட்ஜெட் ரக ஃபேம்லி ஏப்ரிலியா கம்ஃபோர்ட் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 2019 யில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் ஹீரோ டெஸ்ட்டினி, ஹோண்டா ஆக்டிவா மாடல்களையும் எதிர்கொள்ள உள்ளது.