2024 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சரில் புதிய 210சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 24.6 PS பவர் வெளிப்படுத்துகின்றது. விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் வெளியாகலாம்.
முன்பாக விற்பனையில் உள்ள பிரபலமான கரீஸ்மா XMR 210 பைக்கிலிருந்து பெறப்பட்ட 210cc லிக்யூடூ கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தாலும், பவர் 0.9 bhp வரை குறைவாகவும், டார்க் 0.3Nm கூடுதலாக வெளிப்படுத்துகின்றது. எனவே, எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் பவர் அதிகபட்சமாக 24.6 PS மற்றும் 20.7 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. தற்பொழுது 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
முன்புறத்தில் 21 அங்குல ஸ்போக் வீல் உடன் 210 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 18 அங்குல ஸ்போக்டூ வீல் உடன் 205 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது சுவிட்சபிள் முறையில் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை விட மிக சிறப்பான வகையில் சிறிய மாறுதல்களை பெற்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் பாடி கிராபிக்ஸ் என பலவற்றில் மாற்றங்களை பெற்றிருக்கும் நிலையில், 4.2 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறக்கூடியதாக உள்ளது.
சிறப்பான ஆ்ஃப்ரோடு அனுபவத்தை வெளிப்படுத்துகின்ற எக்ஸ்பல்ஸ் 210 மேம்படுத்தப்பட்ட எஞ்சின் சிறப்பான வசதிகளுடன் வந்துள்ளதால் தொடர்ந்து மிக சவாலான விலையில் அமைவதுடன் விற்பனைக்கு விரைவில் வெளியாக உள்ளது.