2025 ஆம் ஆண்டிற்கான புதிய சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் OBD2B ஆதரவுடன் கூடிய எஞ்சினை பெற்று சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வற்றை பெற்று ரூ. 85,935 முதல் ரூ.97,435 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக முந்தைய மாடலை விட அடிபட்டையான ஃபிரேம் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு கூடுதலாக எஞ்சின் உள்ளிருக்கும் பாகங்களான கேம்ஷாஃப்ட், கிரான்ஸ்காஃப்ட் மற்றும் க்ராங்க்கேஸ் மாற்றப்பட்டு, புதிய ஃப்யூவல் இன்ஜெக்டர், இசியூ புரோகிராம் புதுப்பிக்கப்பட்டவை கொண்டிருப்பதனால், முந்தைய மாடலை விட எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
முன்புற அப்ரானில் இரண்டு பாக்கெட் ஸ்டோரேஜ், புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், வெளிப்புறத்தில் பிரேக் லைட்டிற்கு மேற்பகுதியில் பெட்ரோல் நிரப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய 21.8 லிட்டர் ஸ்டோரேஜ்க்கு பதிலாக இருக்கைக்கு அடியில் 24.4 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.
எனவே, புதிய OBD2B ஆதரவினை பெற்ற 124cc எஞ்சின் அதிகபட்சமாக 8.31hp பவர் மற்றும் 10.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் பெற்று 90/90 – 12 54J மற்றும் 90/100 – 10 53J டயர் கொண்டுள்ளது.
(Ex showroom)