2025 ஆம் ஆண்டிற்கான புதிய யமஹா FZ-S Fi பைக்கல் கூடுதலாக புதிய நிறங்களுடன், பாடி கிராபிக்ஸ் மேம்பட்டதாக விற்பனைக்கு ரூ.1,35,539 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான FZ-S Fi ஹைபிரிட் மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய மாடலின் அடிப்படையான எஞ்சின் பவர் மற்றும் உள்ளிட்ட மெக்கானிக்கல் சார்ந்தவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லை.
12.4PS பவர் மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற OBD-2B ஆதரவினை 149cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு, 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2025 மாடலில் பெட்ரோல் டேங்கின் எக்ஸ்டென்ஷன் பகுதியில் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு, முன்புறத்தில் டர்ன் இன்டிகேட்டர் ஆனது டேங்க் எக்ஸ்டென்ஷன் பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்பொழுது மெட்டாலிக் கிரே, மேட் பிளாக், ஐஸ்-ஃப்ளூ வெர்மில்லியன் மற்றும் சைபர் கிரீன் என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.
பல்வேறு தகவல்களை வழங்கும் எல்சிடி கிளஸ்ட்டருடன் Y-Connect ஆப் இணைப்புடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் , கால், எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டதாகவும், 140 மிமீ ரேடியல் டயருடன் பின்பக்கம் 220 மிமீ டிஸ்க் மற்றும் முன்பக்கம் 282 மிமீ டிஸ்க்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக உள்ளது.