பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியில் வெளியான 400சிசி எஞ்சின் பெற்ற ஸ்பீடு ட்வீன் டி4 பைக்கின் விலையை ஒரு வருடத்திற்குளள் ரூ.18,000 வரை குறைத்து தற்பொழுது ரூ.1.99 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் உள்ள ஸ்பீடு 400 ட்வீன் அடிப்படையில் பல்வேறு வசதிகள் குறைக்கப்பட்ட ஸ்பீடு டி4 மாடலில் குறிப்பாக எஞ்சின் பவர் உட்பட சில குறிப்பிடதக்க வசதிகளான டெலிஸ்கோபிக் ஃபோர்க், எளிமையான கிளஸ்ட்டர் உட்பட சில டெக் சார்ந்த வசதிகளை இழந்துள்ளது.
ஸ்பீடு T4 மாடலில் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,000 rpm-ல் 30.6 hp பவரையும், 5,000 rpm-ல் 36 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்துகின்ற டிரையம்ப் ஸ்பீடு 400 டி4 பைக்கின் விலை குறைப்பு, மேலும் போட்டியை அதிகரிப்பதுடன் ஹீரோ மேவ்ரிக் 440 மாடலுக்கும் சவாலாக அமைந்துள்ளது.