அட்வென்ச்சர் டூரிங் ரக மாடலாக விளங்கும் சுசூகி நிறுவனத்தின் V-Strom SX மாடலில் OBD2B ஆதரவினை பெற்று கூடுதலாக புதுப்பிக்கப்பட்ட நிறத்துடன் ரைட் கனெக்ட் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வி-ஸ்ட்ரோம் எக்ஸ்எஸ் பைக்கில் சாம்பியன் மஞ்சள் எண்.2, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் சோனோமா ரெட் என மூன்று நிறங்களை பெற்று முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்று பின்புறத்தில் 17 அங்குல வீலுடன் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் உடன் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டு தொடர்ந்து, 249 சிசி, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 9,500 rpm-ல் 26.5 bhp பவரையும், 7,500 rpm-ல் 22.2 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையிலான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது. இந்நிறுவனம் புதிய ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் 155 என இரண்டு மாடல்களையும் வெளியிட்டுள்ளது.
2025 சுசூகி V-Strom SX பைக்கின் விலை ரூ.2.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.