சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மேக்ஸி ஸ்டைல் பர்க்மேன் ஸ்டீரிட் மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் EX என இரு மாடல்களிலும் OBD-2B மேம்பாட்டை பெற்று மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த இரு ஸ்கூட்டர்களின் அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த வசதிகளில் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல், 124cc எஞ்சின் 6,500 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
பர்க்மேன் ஸ்டீரிட் மாடலில் பின்பக்கத்தில் 90/100-10 டயரும் பர்க்மேன் ஸ்டீரிட் EX ஸ்கூட்டரில் 100/80 -12 டயரை கொண்டுள்ளதால், இருபக்கத்திலும் 12 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றுள்ளதால் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் உடன் கூடிய ஒற்றை சஸ்பென்ஷனை பெற்றதாக அமைந்துள்ளது.
பர்க்மேன் ஸ்டீரிட் மாடலில் ஸ்டாண்டர்டு, ரைட் கனெ்ட் என இருவிதமான வேரியண்டடை பெற்று ரைட் கனெக்ட் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோலில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.
பர்க்மேன் ஸ்டீரிட்டில் மெட்டாலிக் மேட் பிளாக் நெ. 2 (YKC), பேர்ல் மிராஜ் ஒயிட், மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர், பேர்ல் மேட் ஷேடோ கிரீன், பேர்ல் மூன் ஸ்டோன் கிரே, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் நெ.2 (4TX) என மொத்தமாக 7 விதமான நிறங்கள் கொண்டுள்ளது.
பர்க்மேன் ஸ்டீரிட் EX-ல் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, மெட்டாலிக் மேட் பிளாக் நெ. 2, மற்றும் மெட்டாலிக் ராயல் காப்பர் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் அனைத்து இருசக்கர வாகனங்களும் ஏப்ரல் 1 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2B மேம்பாட்டுக்கு இணையாக தற்பொழுது மாற்றப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.