பிரசத்தி பெற்ற சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் கொண்ட அவெனிஸ் மாடலில் OBD-2B மேம்பாட்டை பெற்ற எஞ்சினுடன் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசனில் மெட்டாலிக் மேட் கருப்பு நெ.2 / மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தை பெற்றதாக வந்துள்ளது.
(Ex-showroom)
மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு வழக்கமான அனைத்து வசதிகளை கொண்டுள்ள ஸ்கூட்டரில் தொடர்ந்து சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்துடன் கூடிய 124cc எஞ்சின் 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
அவெனிஸில் ஸ்பெஷல் எடிசன் உட்பட 4 விதமான நிறங்களாக ஸ்பார்க்கிள் கருப்பு / பேரல் மீரா ரெட், சாம்பியன் மஞ்சள் நெ.2 / கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக், கிளாஸி ஸ்பார்க்கிள் பிளாக் / பேரல் பனிப்பாறை வெள்ளை மற்றும் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகும்.
முன்புறத்தில் டிஸ்க் மற்றும் டிரம் ஆப்ஷனை பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றுள்ளதால் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் உடன் கூடிய ஒற்றை சஸ்பென்ஷனை பெற்றதாக அமைந்துள்ளது.
அவெனிஸ் மாடலில் ரைட் கனெக்ட் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோலில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.