ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் 2025 மாடல் விலை அனேகமாக வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஸ்கூட்டரின் முழுமையான விபரங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது டீலர்களுக்கு வர துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனவரி 1 முதல் இந்த இந்த மாடலை டெலிவரி வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதால் அதற்கு முன்பாக விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்பை விட மிக ஸ்டைலிசான தோற்ற அமைப்பினை பெற்று பல்வேறு மேம்பாடுகளுடன் ரெட்ரோ அமைப்பினை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கின்ற 2025 டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின்றது.
மூன்று விதமான வேரியண்டுகளில் சுமார் 5 விதமான நிறங்களை பெற்று டாப் ZX+ மாடலில் காப்பர் நிறத்துடன் எட்ரனல் வெள்ளை, ரீகல் பிளாக் என இரண்டு நிறங்களும் ZX வேரியண்டில் மிஸ்டிக்யூ மேக்னெட்டா, காஸ்மிக் ப்ளூ, மற்றும் குறைந்த விலை VX மாடலில் க்ரூவீ ரெட், எட்ரனல் வெள்ளை, ரீகல் பிளாக் என மூன்று நிறங்கள் உள்ளது.
டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான வேரியண்டின் அடிப்படையில் பல்வேறு மேம்பாடுகளுடன் வந்துள்ள ஸ்கூட்டரின் டாப் மாடலில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.
2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 84,000 முதல் ரூ.90,000 வரை அமையலாம்.