பிரபலமான கேடிஎம் 390 டியூக் பைக்கின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் கூடுதலாக கிரே நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடர்ந்து கிடைக்க உள்ளது.
புதிய நிறத்துடன் நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை தவிர சிறிய அளவிலான சுவிட்ச் கியர் மாற்றங்களை பெற்று வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து கிடைக்கின்றது.
390 டியூக் பைக் அதிகபட்சமாக 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக, ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.
320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் பின்புற 240 மிமீ டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்ற 390 டியூக்கில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனை பெற்று 5 அங்குல டிஜிட்டல் கன்சோல், லான்ச் கன்ட்ரோல் மற்றும் ரைடிங் முறைகள் (ஸ்டீரிட், ரெயின் மற்றும் ட்ராக்) ஆகியவற்றைப் பெறுகிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அழைப்பு மற்றும் இசை கட்டுப்பாடு போன்ற பிற அம்சங்களும் கிடைக்கின்றன.