கேடிஎம் வெளியிட்டுள்ள பிரபலமான 390 அட்வென்ச்சர் R பைக்கில் புதிய 399சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு பல்வேறு மாற்றங்களுடன் நவீனத்துவமான வசதிகளுடன் விளங்கும் நிலையில் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் மற்றும் 390 அட்வென்ச்சர் எக்ஸ் என இரண்டு பைக்கிலும் முன்பாக வெளியான 390 டியூக் மாடலில் இடம்பெற்ற புதிய 398.7cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றிருக்கின்றது.
மிக சிறப்பான வகையில் ஆஃப் ரோடு பயணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் முன்புறத்தில் 21 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 18 அங்குல வீல் வழங்கப்பட்டு வயர் ஸ்போக்டூ வீல் இட்பெற்றுள்ளது. முன்புறத்தில் 90/90 டயரும் பின்புறத்தில் 140/80 டயரும் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் 2 பிஸ்டன் பெற்ற 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ் உடன் ஆஃப் ரோடு ரைடிங் மோடு, டிராக்ஷன் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
870 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ள 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் 230 மிமீ பயணிக்கின்ற WP APEX 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 230 மிமீ பயணிக்கின்ற அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.
14 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ள 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் எல்இடி ஹெட்லைட், சற்று உயரமான வின்ட் ஷீல்டு ஆகியவற்றுடன் TFT கிளஸ்ட்டரை பெற்று கேடிஎம் கனெக்ட் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
அட்வென்ச்சர் ஆர் மாடலை விட சற்று குறைவான ஆஃப் ரோடு பயண வசதிகளை பெற்றுள்ள 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் 825 மிமீ இருக்கை உயரம் பெற்று தொடர்ந்து ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு அட்ஜெஸ்ட் செய்ய இயலாத 200 மிமீ பயணிக்கின்ற WP APEX 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 200 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.
முன்புறத்தில் 19 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 1 அங்குல வீல் வழங்கப்பட்டு அலாய் வீல் இட்பெற்றுள்ளது. முன்புறத்தில் 100/90 டயரும் பின்புறத்தில் 130/80 டயரும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 2 பிஸ்டன் பெற்ற 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஆஃப் ரோடு ஏபிஎஸ் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டு 165 கிலோ எடை கொண்டுள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் ல்இடி ஹெட்லைட், சற்று உயரமான வின்ட் ஷீல்டு ஆகியவற்றுடன் LCD கிளஸ்ட்டரை பெற்று கேடிஎம் கனெக்ட் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.