இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் வெளியிட உள்ள 2025 ஆம் ஆண்டிற்கான புதிய 250 அட்வென்ச்சர் பைக்கின் எஞ்சின் விபரம் உட்பட அனைத்து விதமான நுட்பவிபரங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 390 அட்வென்ச்சர், 390 அட்வென்ச்சர் எக்ஸ் என இரண்டின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
2025 KTM 250 Adventure
390 அட்வென்ச்சர் போலவே டிசைன் அமைப்பினை பகிர்ந்து கொண்டுள்ள 250 அட்வென்ச்சர் பைக்கில் தொடர்ந்து டியூக் 250 பைக்கில் உள்ள அதே 249சிசி எஞ்சினை பகிர்ந்து கொண்டு அதிகபட்சமாக 9250rpm-ல் 31PS மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் பெற்றுள்ளது.
ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான 200 மிமீ பயணிக்கின்ற WP APEX 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 200 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.
14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டு 160 கிலோ எடையுள்ள பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 17 அங்குல வீல் வழங்கப்பட்டு அலாய் வீல் இட்பெற்றுள்ளது. முன்புறத்தில் 100/90 டயரும் பின்புறத்தில் 130/80 டயரும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 2 பிஸ்டன் பெற்ற 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஆஃப் ரோடு ஏபிஎஸ் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
எல்இடி ஹெட்லைட், விண்ட் ஷீல்டு உள்ளிட்ட வசதிகளை பெற்று அலாய் வீல் கொண்டுள்ள பைக்கில் 5 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்று கேடிஎம் கனெக்ட் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குடன் 250 மாடலும் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்பட உள்ளது.