பொதுப் போக்குவரத்து சாலைகளில் பயணிக்ககூடிய அட்வென்ச்சர் டர்ட் பைக் மாடலை ஹஸ்குவர்னா பாய்னியர் என்ற பெயரில் 5.5kwh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு சுமார் 137 கிமீ ரேஞ்ச் (WMTC) வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 பிப்ரவரி முதல் சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
பாய்னியர் டர்ட் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 5.5 kwh பேட்டரி மூலம் 11 kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 19.2 kW வரை, 12000 rpm-லும், டார்க் 37.6NM வரை வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு பைக்கின் எடை 112 கிலோ ஆக உள்ளது.
பேட்டரியை நீக்கும் வகையில் வழங்கப்பட்டாலும் ஸ்பேனர் மூலம் 10 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சார்ஜிங் நேரம் (0-100%) 660 W சார்ஜர் மூலம் 8 மணி நேரமும்,
சார்ஜிங் நேரம் (0-100%) விருப்பமான 3,3 kW பவர் சார்ஜர் மூலமாக 2 மணி நேரம் மட்டும் தேவைப்படும் என உறுதிப்படுதியுள்ளது.
chromium-molybdenum சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பைக்கின் முன்புறத்தில் மிச்செலியன் என்டூரா டயர் பொருத்தப்பட்டு 90/90-21 மற்றும் பின்புறத்தில் 140/80-18 ஆக உள்ளது. முன்புறத்தில் 250 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் ஒற்றை ஸ்பீரிங் உடன் 240 மிமீ பயணிக்கின்ற ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.
345 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ள ஹஸ்குவர்னா பாய்னியர் பைக்கில் முன்புறத்தில் 260 மிமீ டிஸ்க் மற்றும் 240 மிமீ டிஸ்க் கொண்டுள்ளது. விலை தொடர்பாக தற்பொழுது எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.