ஹோண்டா டூ வீல்ர் இந்தியா நிறுவனத்தின் புதிய 2025 ஆம் ஆண்டிற்கான SP160 பைக்கில் கூடுதலாக 4.2TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புதிய OBD2B விதிமுறைக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,21,951 முதல் ரூ.1,27,956 (எகஸ்ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி125 என இரண்டு மாடல்களில் இடம்பெற்றிருப்பதனை போன்றே புதிய 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்பி160 பைக்கில் தொடர்ந்து HET நுட்பத்துடன் கூடிய OBD2B ஆதரவினை பெற்ற 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13 hp பவர், 14.8 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட பவர் 0.2ஹெச்பி மற்றும் டார்க் 0.2 என்எம் அதிகரித்துளது.
மற்ற அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், முத்து இக்னியஸ் பிளாக், பெர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் என நான்கு விதமான நிறங்களுடன் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர் கொண்டு 17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது.
புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில்லைட் பெற்றுள்ள நிலையில் முன்பக்கத்தில் 80/100-17M/C 46P மற்றும் பின்புறத்தில் 130/70-17M/C 62P டயர் பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- SP160 Single Disc Rs. 1,21,951
- SP160 Double Disc Rs. 1,27,956
(Ex-showroom Delhi)