125சிசி சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் 2025 SP125 பைக்கில் டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. துவக்க நிலை டிரம் பிரேக் வேரியண்டில் வெறும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மட்டும் பெற்று இருக்கின்ற நிலையில் டாப் வேரியண்டில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உடன் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை பெறுவது உறுதியாகி உள்ளது.
SP125 எஞ்சின் பவர் மற்றும் டார்க் தொடர்பில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது. மேலும் முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு மேம்பாடுகளான நிறங்கள் மற்றும் ஸ்டைலிசான பாடி கிராபிக்ஸ் பெற உள்ளது.
அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பெற்று, ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட முழுமையான எல்இடி லைட் பெற்று, பின்புறத்தில் புதிய எல்இடி லைட் ஆனது மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது அதே நேரத்தில் மற்ற அம்சங்களில் பெரிதாக எந்த மாற்றங்களும் கிடையாது. முன்புறத்தில் டிஸ்ப்ரேக் அல்லது டிரம்ப் என இருவிதமான ஆப்ஷனை பெற்று பின்புறத்தில் பொதுவாக டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஏபிஎஸ் போன்ற ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை.
2025 ஹோண்டாவின் எஸ்பி125 விலை ரூ.93,000 முதல் ரூ.1,00,000 (எக்ஸ்-ஷோரூம்) விலைக்குள் அமையலாம்.
இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் உள்ள ஏபிஎஸ் பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 பல்சர் NS125, பல்சர் N125, மற்றும் ஹீரோ கிளாமர் 125 ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
image source – MRD Vlogs/youtube