சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் OBD-2B அப்டேட் பெற்று வரும் நிலையில் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய கிராபிக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.
மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து ஷைன் 100 பைக்கில் ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் 98.98cc எஞ்சின் அதிகபட்சமாக 7.61bhp மற்றும் 8.05Nm வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
2025 ஷைன் 100 மாடலில் கருப்புடன் சிவப்பு, கருப்புடன் நீலம், கருப்புடன் ஆரஞ்சு, கருப்புடன் சாம்பல் மற்றும் கருப்புடன் பச்சை என 5 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.
தொடர்ந்து இந்த மாடலில் இரட்டை பிரிவு கிளஸ்ட்டர், கருப்பு நிற அலாய் வீலுடன், ஒற்றை இருக்கை கொண்டதாக இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.
2025 ஹோண்டா ஷைன் 100 பைக்கின் விலை ரூ.68,767 ஆகும். (ex-showroom, Delhi)