ஹோண்டா நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு 350சிசி வரிசை பைக்கிற்கு எதிராக உள்ள CB350 வரிசையில் உள்ள CB350, CB350 RS, CB 350 H’Ness என மூன்று மாடல்களும் OBD-2B மேம்பாடு பெற்றிருப்பதுடன் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தனது இணையதளத்தில் விபரங்களை ஹோண்டா பதிவேற்றிருந்த நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.
OBD-2B இணக்கான 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொண்டுள்ளது.
2025 Honda CB350 H’ness Price list
DLX Pro க்ரோம் டாப் வேரியண்டில் நீலம், கிரே மற்றும் பிளாக் நிறங்கள் சேர்க்கப்பட்டு DLX Pro வேரியண்டில் கருப்பு, கிரே மற்றும் சிவப்பு, DLX மாடலில் கருப்பு, கிரே என புதிய நிறங்களை பெற்றுள்ளது.
- DLX – ₹ 2,11,322
- DLX Pro – ₹ 2,14,321
- DLX Pro Chrome – ₹ 2,16,322
- LEGACY EDITION – ₹ 2,17,177
2025 Honda CB350 Price list
மேட் டியூன் பிரவுன், கிரெஸ்ட் மெட்டாலிக், ரெட் மெட்டாலிக், பச்சை, கருப்பு போன்ற நிறங்கள் பெற்றுள்ளது.
- DLX – ₹ 2,15,622
- DLX Pro Dual tone – ₹ 2,18,621
2025 Honda CB350RS Price list
சிவப்பு, கிரே மெட்டாலிக், கருப்பு உடன் மஞ்சள், மற்றும் கிரவுண்ட் கிரே போன்ற நிறங்களை
- DLX – ₹ 2,16,322
- DLX Pro Dual tone – ₹ 2,18,678
- DLX Pro – ₹ 2,19,322
- NEW HUE EDITION – ₹ 2,20,178
(EX-showroom Tamil Nadu)