ஹீரோவின் பிளெஷர் பிளஸ் 110 ஸ்கூட்டரில் தற்பொழுது OBD-2B மேம்பாட்டை பெற்றதாக விற்பனைக்கு ரூ.71,168 முதல் துவங்குகின்றது. இம்முறை கனெக்டேட், ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட ஒரு சில வேரியண்டுகள் நீக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, தொடர்ந்து பிளெஷர்+ 110cc ஸ்கூட்டரில் உள்ள எஞ்சின் obd-2b ஆதரவுடன் 8hp பவர் மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. தொடர்ந்து இந்த ஸ்கூட்டரில் டிஜி அனலாக் முறையிலான கிளஸ்ட்டர் கொண்டுள்ளது.
யூஎஸ்பி சார்ஜர் மற்றும் க்ளோவ்பாக்ஸ் போன்றவற்றை பிளஷர் ப்ளஸ் பெற்றதாகவும், இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் சிங்கி்ள் சைட் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.
- PLEASURE+ VX OBD2B ₹ 71,168
- PLEASURE+ XTEC ZX OBD2B ₹ 79,048
- PLEASURE+ XTEC ZX+ OBD2B ₹ 80,498
(எக்ஸ்-ஷோரூம்)
இந்த மாடலுக்கு போட்டியாக பிரசத்தி பெற்ற ஆக்டிவா 110, ஜூபிடர் 110 போன்றவை சந்தையில் உள்ளது.