புதிதாக வந்துள்ள 2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் கூடுதலாக OBD-2B மேம்பாட்டை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் விலை ரூ.1,400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, VX, ZX மற்றும் ZX+ போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
தொடர்ந்து டெஸ்டினி 125ல் OBD-2B மேம்பாட்டை பெற்ற 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் வழங்கும் நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கின்றது.
டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக இணைப்பதனால் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகளுடன் கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.
இருபக்கத்திலும் 12 அங்குல அலாய் வீலுடன் 130 மிமீ டிரம் அல்லது 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது.
- DESTINI 125 VX OBD2B – ₹ 85,535
- DESTINI 125 ZX OBD2B – ₹ 94,385
- DESTINI 125 ZX+ OBD2B – ₹ 95,385
(ex showroom)
டாப் ZX+ வேரியண்டில் காப்பர் ஃபினிஷ் கொண்டு டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் அலாய் வீல் பெற்று டிஸ்க் பிரேக், இக்னிஷன் சுவிட்சில் ஒளிரும் வகையில் அமைந்திருப்பதுடன் 18 லிட்டர் பூட் ஸ்பெஸ் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்களை விட சற்று குறைவாக உள்ளது.