Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

by MR.Durai
30 August 2025, 3:11 pm
in Bike News
0
ShareTweetSend

ather 450 apex first review

2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை ஏதெர் 450 ஏபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றதாக கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக க்ரூஸ் கண்ட்ரோல் வரவுள்ள மாடல்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே 450 ஏபெக்ஸ் பயன்படுத்தி வருபவர்கள் OTA மூலம் அப்டேட் வழங்கப்படுகின்றது.

இன்ஃபினைட் க்ரூஸ் என ஏதெர் எனர்ஜி பெயர் வைத்துள்ள நிலையில் CityCruise, Hill Control, மற்றும் Crawl Control என் மூன்று விதமான முறையில் வழங்குகின்றது.

சிட்டி க்ரூஸ் எனப்படும் முறையில் நகரங்களுக்கு ஏற்ற வேகம் மட்டுமல்லாமல் நெஞ்சாலைகளில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கவும் க்ரூஸ் கட்டுப்பாடு எவ்விதமான இடையூறு இன்றி பயணிக்க உதவுகின்றது. ரைடர் பிரேக் போடும்போது அல்லது வேகத்தை மாற்றும்போது துண்டிக்காமல், புதிய வேகத்திற்கு தடையின்றி மாற்றியமைக்கிறது.

ஹில் கன்ட்ரோல்  முறை இறங்கும் பொழுது அல்லது மேல்நோக்கி ஏறுவதற்கு துல்லியமான பயணத்தை வழங்குவதுடன், கீழ்நோக்கி இறங்குதல்களுக்கு மேஜிக் பிரேக்கிங் (மேஜிக் ட்விஸ்ட்) பயன்படுத்துகிறது, எவ்விதமான தலையீடு இல்லாமல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலம் நிலையான வேகத்தை பராமரிக்கிறது.

க்ராவல் கன்ட்ரோல் எனப்படுவது கரடுமுரடான அல்லது சீரற்ற சாலைகளில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மென்மையான குறைந்த வேகத்தில் பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றது. ஈரமான அல்லது வழுக்கும் பரப்புகளில் ஸ்டெபிளிட்டி வழங்க மல்டிமோட் டிராக்ஷன் கன்ட்ரோலுடன் க்ரால் கன்ட்ரோல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

டாப் 3.7 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 157 கிமீ தூரம் செல்லும் என சான்றிதழ் பெற்றுள்ளது. பவர் 7 kW (9.39 bhp) மற்றும் 26 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன்  Wrap+ ரைடிங் மோடினை பயன்படுத்தினால் 100 kmph வேகத்தை எட்ட உதவுகிறது.

கூடுதலாக குரல் வழி கட்டுப்பாடு மூலம் வசதியை இயக்குவது, கிரிக்கெட் விபரங்களை டேஸ்போர்டில் அறியும் வசதிகளை பெற்று 2025 ஏதெர் 450 ஏபெக்ஸ் விலை ரூ.1.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில்

ஏதெரின் க்ம்யூனிட்டி தினத்தில் EL01 கான்செப்ட், Redux, ரிஸ்டா ஸ்கூட்டர் மேம்பாடு ஆகியவற்றுடன் விரைவு சார்ஜிங் ஆப்ஷனை அறிவித்துள்ளது.

Related Motor News

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

Tags: Ather 450 ApexAther Energy
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan