இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற யமஹா நிறுவனம் YZF R15M பைக்கில் கார்பன் ஃபைபர் எடிசன் மாடல் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனம் பாரத் மொபைலிட்டில் FZ-X க்ரோம் எடிசன் உட்பட NMAX 155, கிராண்ட் ஃபிளானோ 125, R1, R7, மற்றும் MT-07 உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனையில் உள்ள பைக்குகள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
Yamaha R15M Carbon Fiber Edition
புதிதாக வந்துள்ள ஆர்15 எம் கார்பன் ஃபைபர் எடிசன் பளபளப்பான தோற்ற பொலிவினை கொண்டுள்ள பைக்கில் முழுமையாக ஃபேரிங் பேனல்கள் என அனைத்தும் faux carbon-fibre ஃபினிஷ் செய்யப்பட்டு R15M பேட்ஜிங் கொண்டிருப்பதுடன் டெயில் கேடில் ஆர்15எம் ஸ்டிக்கிரிங் கொண்டுள்ளது.
மற்றபடி, மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் R15 M மாடலில் LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 18.1 bhp மற்றும் 14.2 Nm வெளிப்படுத்துகின்றது. சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் உடன் வருகின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் உடன் 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயருடன் 220 மிமீ டிஸ்க் உடன் யமஹா R15M பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
இந்திய சந்தையில் எப்பொழுது விற்பனைக்கு யமஹா R15M கார்பன் ஃபைபர் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் குறித்தான எந்த உறுதியான தகவலை யமஹா அறிவிக்கப்படவில்லை.