ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஜாவா பைக் மாடலில் முந்தைய 294cc என்ஜினுக்கு பதிலாக பெராக் பைக்கில் உள்ள 334cc என்ஜினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சந்தைக்கு வரவுள்ள ஜாவா 350 பைக் ஆனது ராயல் என்ஃபீல்டு 350 வரிசை, ஹோண்டா சிபி350, ஹார்லி-டேவிட்சன் X440 உட்பட வரவுள்ள ஹீரோ மேவரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
Jawa 350
ஏற்கனவே விற்பனையில் உள்ள ஜாவா 42 பாபர் மற்றும் பெராக் ஆகியவற்றில் உள்ள மாடலில் இடம்பெற்றுள்ள லிக்யூடு கூல்டு 334cc என்ஜின் ஆனது அதிகபட்சமாக 29 hp பவர் மற்றும் 32.7 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது விற்பனையில் உள்ள அடிப்படையான ஜாவா பைக் டிசைனை தக்கவைத்துக் கொண்டு கூடுதலாக சில ஸ்டைலிஷான க்ரோம் பாகங்கள், புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் மாறுதல்களை பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
மற்றபடி, மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் சேஸ் ஆனது புதுப்பிக்கப்பட்டு கூடுதல் கிரவுண்ட் கிளியரண்ஸ் பெறக்கூடும். முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கலாம்.
வரும் ஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஜாவா 350 பைக்கின் விலை ரூ.2.20 லட்சத்தில் துவங்கலாம்.