ரெட்ரோ ஸ்டைலிங் வடிவமைப்பினை பெற்ற 2024 கவாஸாகி Z900RS பைக் மாடல் மெட்டாலிக் டைபலோ கருப்பு நிறத்தை கொண்டதாக விற்பனைக்கு ரூ.16.80 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, வசதிகள் தோற்ற அமைப்பில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.
விற்பனைக்கு வந்துள்ள இசட் 900 ஆர்எஸ் பைக்கிற்கு போட்டியாக டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் பைக் இந்தியாவில் கிடைக்கின்றது.
2024 Kawasaki Z900RS
Z900RS பைக்கில் முன்பக்கத்தில் வட்ட வடிவத்தை பெற்ற எல்இடி ஹெட்லைட், இரட்டை-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியர் டிராப் வடிவ எரிபொருள் டேங்க் பெற்று ஒற்றை இருக்கை மற்றும் இரு முனைகளிலும் ஸ்போக்-ஸ்டைல் காஸ்ட் வீல்கள் ஆகியவை பெற்றுள்ளது.
948சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 8,500 rpm-ல் 107 bhp பவர், 6,500rpm-ல் 95 Nm டார்க்கையும் வழங்குகின்ற பைக்கில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரட்டை 300 மிமீ டிஸ்க்குகள், ஒற்றை 250 மிமீ பின்புற டிஸ்க், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் கொண்டுள்ள மாடலில், டூயல்-சேனல் ஏபிஎஸ், கவாசாகி டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றுடன் வருகிறது.