இந்தியாவில் கவாஸாகி பிரீமியம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது எலிமினேட்டர் 450 க்ரூஸர் ரக பைக் மாடலை ரூ.5.62 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் என்ற ஒற்றை நிறத்தை மட்டும் பெற்றுள்ளது.
சமீபத்தில் கவாஸாகி நின்ஜா ZX-6R பைக் விற்பனைக்கு ரூ.11.09 லட்சத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது மாடலாக எலிமினேட்டர் வெளியாகியுள்ளது.
2024 Kawasaki Eliminator 450
விற்பனைக்கு வந்துள்ள புதிய எலிமினேட்டர் 450 மாடலில் 451cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 rpmல் 45 bhp பவர் மற்றும் 6,000rpm 42.6 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் ஆனது இடம்பெற்றுள்ளது.
நியோ ரெட்ரோ வடிவமைப்பினை கொண்ட க்ரூஸர் ரக பைக்கில் ஸ்டீல் டெர்லிஸ் சேஸ் கொண்டு தயாரிக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் முன்பக்கத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல வீல் உள்ளது.
வட்ட வடிவத்திலான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெறுகின்ற எலிமினேட்டர் 450 பைக்கில் ஸ்பீடோமீட்டர், டேகோமீட்டர், கடிகாரம், ஓடோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் எரிபொருள் அளவு ஆகியவை அடங்கும்.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் புளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் கவாஸாகியின் ரைடாலஜி ஸ்மார்ட்போன் செயலி மூலம் பல இணைப்பு அம்சங்களை பெறுவதற்கான வசதிகளை கொடுத்துள்ளது.