அமெரிக்காவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஸ்டீரிட் CB300R பைக்கில் கூடுதலாக இரண்டு நிறங்களை பெற்றுள்ளது. மற்றபடி, தோற்ற அமைப்பு, என்ஜின், வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
மெட்டாலிக் கருப்பு மற்றும் டஸ்க் மஞ்சள் என இருவிதமான நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
2024 Honda CB300R
சிபி 300ஆர் பைக்கில் மிகவும் பவர்ஃபுல்லான 286 சிசி DOHC 4 வால்வுகளை கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 31 hp பவர் மற்றும் 27.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
வெளிப்படுத்தும் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை ஹோண்டா பீக் ஹோல்ட் ஃபங்ஷன் என அழைக்கின்றது. இதன் மூலம் கியர் ஷிஃபடிங் பொசிசன், ஸ்பிட் , வார்னிங் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களை அறிய உதவுகின்றது.
41 மிமீ USD ஃபோர்கினை முன்புறத்தில் பெற்றதாகவும், பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது. சிபி 300ஆரில் 4 பிஸ்டன்களை பெற்ற 286 மிமீ டிஸ்க் முன்புற டயரில் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அனைத்து விதமான ரைடிங் நேரத்திலும் சிறப்பாக இயங்க ஐஎம்யூ இடம்பெற்றுள்ளது.
விற்பனையில் உள்ள தற்போதைய ஹோண்டா CB300R மாடல் விலை ரூ.2.77 லட்சம் ஆகும். புதிய மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.