சர்வதேச அளவில் டூகாட்டி மான்ஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சிறப்பு நிறத்துடன் பல்வேறு சிறிய மாற்றங்களை பெற்ற Monster 30 Anniversario வந்துள்ளது. மொத்தம் 500 எண்ணிக்கையில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும்.
500 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதால் ஒவ்வொரு மாடலுக்கும் ஒரு சிறப்பு எண் வழங்கப்பட்டிருக்கும். இந்திய சந்தையில் ஒரு சில யூனிட்டுகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கலாம்.
Ducati Monster 30 Anniversario
குறிப்பாக விற்பனையில் உள்ள மாடலை விட வித்தியாசப்படுத்தும் வகையில், பாடி கிராபிக்ஸ், இலகு எடை கொண்ட ஒரு சில பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் பைக்கின் மொத்த எடை 4 கிலோ வரை குறைக்கப்பட்டு 184 கிலோ கொண்டுள்ளது.
மேலும் இருக்கை உயரம் 20 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு 840 மிமீ ஆகவும், மான்ஸ்டர் ஆனிவர்சரியோ பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக், நான்கு-பிஸ்டன் காலிப்பர் பெற்ற பிரேக், 17-இன்ச் கோல்டு நிறத்தை பெற்ற அலாய் வீலில் பைரெல்லி டையப்லோ ரோஸ்ஸோ டிவி டயர்களையும் பெறுகிறது. சேஸ் பாகங்கள் மான்ஸ்டர் SP போலவே இருக்கும், எனவே இது 43 mm Ohlins NIX ஃபோர்க்கு மற்றும் Ohlins மோனோஷாக் மற்றும் ஸ்டீயரிங் டேம்பர் ஆகியவற்றைப் பெறுகிறது.
937சிசி, ட்வின்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு டெஸ்டாஸ்ட்ரெட்டா இன்ஜின், டெஸ்மோட்ரோமிக் டைமிங்குடன் கூடிய 9,250rpm-ல் 109.9 bhp மற்றும் டார்க் 6,500rpm-ல் 93 Nm ஆகும்.
1993 ஆம் ஆண்டு முதன்முறையாக டூகாட்டி மான்ஸ்டர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.