200சிசி சந்தையில் கிடைக்கின்ற பல்சர் என்எஸ்200 vs அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி என இரண்டு நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களின் எஞ்சின், நுட்பவிபரங்கள், வசதிகள் மற்றும் ஆன்ரோடு விலையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் வகையிலான தோற்றத்துடன் நவீனத்துவமான வசதிகள் கொண்டதாக வந்துள்ள புதிய 2024 பல்சர் NS200 மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் எல்இடி ஹெட்லைட் என இரு முக்கிய அம்சங்களை சேர்த்து விற்பனையில் உள்ள அப்பாச்சி RTR 200 4V மோட்டார்சைக்கிளுக்கு எதிராக அமைந்துள்ளது.
பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V: எஞ்சின்
இரு மாடல்களின் எஞ்சினை முதலில் நாம் ஒப்பீடு செய்தால் பல்சர் 200 என்எஸ் மாடல் அப்பாச்சி 200 மாடலை விட சுமார் 4.6bhp வரை கூடுதல் பவர் வெளிப்படுத்துகின்றதை அறியலாம். இதன் மூலம் அப்பாச்சியை விட பல்சர் சிறப்பான செயல்திறனை வழங்குவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் லிக்யூடு கூல்டு எஞ்சின் என அனைத்திலும் முந்துகின்றது.
ஸ்போர்ட், அர்பன் அல்லது ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
நுட்பவிபரம் | பல்சர் NS200 | அப்பாச்சி RTR 200 4V |
எஞ்சின் | 199.5 cc | 197.75 cc |
பவர் bhp | 24.1 bhp | 20.5 bhp |
டார்க் | 18.7 Nm | 17.2 Nm |
கியர்பாக்ஸ் | 6 ஸ்பீடு | 5 ஸ்பீடு |
எஞ்சின் ஒப்பீடு முடிவில் பவர், டார்க், செயல்திறன் என அனைத்திலும் அப்பாச்சி மோட்டாசைக்கிளை விட பல்சர் என்எஸ் 200 சிறப்பானதாக உள்ளது. ஆனால் ரைடிங் மோடுகளை மட்டும் பெறவில்லை.
பல்சர் NS200 vs அப்பாச்சி RTR 200 4V: வசதிகள்
ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் உடன் உள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது. பல்சரில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க் பெற்றுள்ளது.
17 அங்குல அலாய் வீல் பெற்றுள்ள இரு மோட்டார்சைக்கிளிலும் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஸ்மார்ட்போன் வாயிலாக ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றிருந்தாலும் அப்பாச்சி மாடலில் ரேசிங் டெலிமேட்டிக்ஸ், லீன் ஏங்கிள் உள்ளிட்ட விபரங்களை பெறலாம்.
2024 Bajaj Pulsar NS200 vs TVS Apache RTR 200 4V On-road Price
தயாரிப்பாளர் | எக்ஸ்ஷோரூம் விலை | ஆன்ரோடு விலை |
Bajaj Pulsar NS200 | ₹ 1,54,522 | ₹ 1,89,672 |
TVS Apache RTR 200 4V | ₹ 1,47,137 | ₹ 1,80,753 |
(All price Tamil Nadu)
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை விட கூடுதல் விலையில் அமைந்திருந்தாலும், அதிகபட்ச பவர், டார்க், செயல்திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் ஆகியவற்றுடன் இல்குவாக ஷிஃப்ட் செய்யவும், பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்த ஏதுவாக 6 வேக கியர்பாக்ஸ் ஆகியவற்றுடன் 2024 பல்சர் 200 என்எஸ் போட்டியாளரை முந்துகின்றது.