அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள மிக குறைந்த விலை பஜாஜ் சேட்டக் ப்ளூ 2901 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.96,000 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக எதிர்பார்க்கப்படும் நிலையில் 5 நிறங்களை பெற உள்ள படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது.
டெக்பேக் மற்றும் டெக்பேக் அல்லாத வேரியண்ட் என இரு விதமாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அர்பேன் 2024 மாடலில் இருந்து பெறப்பட்ட 2.9Kwh லித்தியம் பேட்டரி பெற்று ரேஞ்ச் 123 கிமீ ஆகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ வெளிப்படுத்தலாம். டெக்பேக் பெற்ற மாடலும் மணிக்கு 63 கிமீ மட்டுமே வேகத்தை பெற்றிருக்கும் ஆனால் சில கனெக்ட்டிவிட்டி வசதிகளை மட்டும் பெறலாம்.
இந்த சேட்டக் புரோ 2024 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கருப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என 5 வித வண்ணங்களுடன் குறைந்த விலை நோக்கமாக கொண்டு வரவுள்ள சேட்டக் புரோ அல்லது ப்ளூ மாடல் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பஜாஜ் வெளியிட உள்ளதால் பல்வேறு வசதிகள் மற்றும் சார்ஜிங் உள்ளட்ட அனைத்திலும் பின் தங்கியதாக இருக்கலாம்.
Chetak Urbane 2024 Vs Chetak Blue
Without TECPAC | With TECPAC | Without TECPAC | With TECPAC | |
Top speed | 63 km/h | 63 km/h | 63 km/h | 73 km/h |
Battery | 2.89 kwh | 2.89kwh | 2.9kwh | 2.9kwh |
Range (Certified) | 123 km | 123 km | 113 km | 113 km |
Ride Modes | Drive mode | ECO & SPORT | Drive mode | ECO & SPORT Mode |
Hill Hold | – | Available | – | Available |
Reverse Mode | – | Available | – | Available |
App Connect | – | Limited | – | Full |
Fob Key | – | – | Available | Available |
Charging time, 650w | 6hrs | 6 hrs | 4 hrs 50 min | 4 hrs 50 min |
Price (expect) | ₹ 96,999 | ₹ 101,999 | ₹ 1,23,319 | ₹ 1,31,319 |
தோற்ற அமைப்பில் இரு ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் பாடி கிராபிக்ஸ் கூடுதலாக புரோ மாடல்கள் பெறுகின்றன. மற்றபடி கிளஸ்ட்டரில் சாதாரண மோனோக்ரோம் வட்ட வடிவ டிஜிட்டல் டிஸ்பிளே, டிரம் பிரேக் இரு டயர்களிம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், ரிமோட் மூலம் இயங்குவதற்கு மாற்றாக வழக்கமான பிசிக்கல் கீ கொடுக்கப்பட்டிருக்கலாம்.
- 2024 Chetak Pro – ₹ 96,999
- 2024 Chetak Urbane – ₹ 1,23,319
- 2024 Chetak Urbane – ₹ 1,47,243
( Price After EMPS 2024 Ex-showroom New Delhi)