126 km ரேஞ்ச் வழஙகும் வகையில் வரவுள்ள 2024 பஜாஜ் சேட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் இடம்பெற உள்ள வசதிகளை பற்றி பஜாஜ் ஆட்டோ தனது சேட்டக்கின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
விற்பனைக்கு சமீபத்தில் வந்த 2.88kWh பேட்டரி பெற்ற சேட்டக் அர்பேன் 2024 மாடல் ரேஞ்ச் 113 கிமீ வரை அதிகரித்திருந்தாலும் ரூ.1,15,000 ஆகவும், மற்றும் கூடுதல் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற உள்ள மாடல் ரூ.1,21,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2024 Bajaj Chetak Premium
புதிதாக வரவுள்ள சேட்டக் பிரீமியம் வேரியண்ட் 3.2kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 126 KM ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றியளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டாப் ஸ்பீடு 73km/hr ஆகும். மற்றபடி, பவர், டார்க் விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை.
அர்பேன் மாடலில் உள்ள எல்சிடி டிஸ்பிளே நீக்கப்பட்டு, புதிய 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டிருக்கும். மற்றபடி, டெக்பேக் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி பெற உள்ள டாப் வேரியண்ட் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இருவிதமான ரைடிங் மோடுகள் பெற்று ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் மோடு மற்றும் முழுமையான MyChetak ஆப் கனெக்ட்டிவிட்டி மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை கட்டுப்பாடு, பயண விபரம், குறிப்பிட்ட எல்லையில் மட்டும் கட்டுப்படுத்தும் வசதி உள்ளது.
2024 பஜாஜ் சேட்டக் பிரீமியம் ஸ்கூட்டருக்கு ஹேசல்நட், கருப்பு மற்றும் இன்டிகோ மெட்டாலிக் என மூன்று நிறங்களை பெற்று ஆஃப் போர்டு சார்ஜர் 650w வழங்கப்படுகின்றது. சேட்டக் பிரீமியம் வேரியண்ட் விலை அறிவிக்கப்படவில்லை
2024 Bajaj Chetak urbane STD – ₹ 1,15,000
2024 Bajaj Chetak urbane Tecpac – ₹ 1,21,001
2023 Bajaj Chetak premium – ₹ 1,15,002
சேட்டக் பிரீமியம் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம்.