யமஹா மோட்டார் இந்திய நிறுவனம், மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி பாடி கிராபிக்ஸ் பெற்ற YZF-R15M, MT-15 V2.0, மற்றும் ரே ZR 125 Fi ஹைப்ரிட் என மூன்று மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பாடி கிராபிக்ஸ் தவிர மற்றபடி எந்தவொரு மாற்றங்களும் இல்லை. கூடுதலாக யமஹா ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டர் மாடலிலும் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
2023 Yamaha Monster Energy MotoGP Edition
விற்பனையில் உள்ள யமஹா R15M மற்றும் MT-15 V2.0 என இரு பைக்குகளிலும் OBD2 மற்றும் E20 ஆதரவுக்கு ஏற்ற 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp பவரை 10,000 rpm-லும் மற்றும் 7500 rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரே ZR 125 Fi ஸ்கூட்டரில் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜிபி பந்தயங்களில் யமஹா நிறுவனம் பயன்படுத்துகின்ற பாடி கிராபிக்ஸ ஆனது மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
2023 யமஹா மோட்டோ ஜிபி R15M – ₹ 1,97,200
2023 யமஹா மோட்டோ ஜிபி MT-15 – ₹ 1,72,700
2023 யமஹா மோட்டோ ஜிபி Ray ZR 125 – ₹ 92,330
(அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்)