ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கின் டீசர் வெளியானதை தொடர்ந்து விற்பனைக்கு சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏபிஎஸ் மோட் மற்றும் புதிய நிறங்கள், எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 200S 4V , பேஸன் பிளஸ் மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில் அந்த படத்துடன் இணைந்துள்ள எக்ஸ்பல்ஸ் 200 4v பைக்கின் படம் 2023 ஆம் ஆண்டு மாடலாகும்.
மூன்று விதமான ஏபிஎஸ் மோடுகள் கொண்டுள்ளதை உறுதி செய்யும் வகையிலான டீசரில் Road, Off-road மற்றும் Rally ஆகியவை உள்ளது அடுத்தப்படியாக டூயல்-சேனல் ABS வரும் முதல் ஹீரோ மோட்டோகார்ப் தயாரிப்பு ஆகும்.
Road மோடில் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அதே நேரத்தில் ஆஃப்-ரோடு பின்புறத்தில் சிறிது ஸ்லிப்பை அனுமதிக்கும் மற்றும் ‘ரேலி’ பயன்முறையில், ஏபிஎஸ் பின்புறத்தில் முற்றிலும் ஆஃப் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
BS6-2 இணக்கமான மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையிலான 200cc என்ஜின் பெற்ற அதிகபட்சமாக 8500rpm-ல் 19.1 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.
தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.8,000 வரை விலை கூடுதலாக வரக்கூடும். எனவே புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V விலை ரூ.1.47 லட்சம் வரை அமையலாம்.
மேலும் படிக்க – 8 ஹீரோ பைக்குகள் வருகை விபரம்