ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆரம்பநிலை க்ரூஸர் ஸ்டைல் மீட்டியோர் 350 பைக்கின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிதாக அரோரா வேரியண்ட் சேர்க்கப்பட்டு முந்தைய ஃபயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர் நோவா வேரியண்டுகளும் உள்ளன.
புதிய மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.06 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.2.30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) நிறைவடைகின்றது. கூடுதலாக தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை சேர்க்கப்பட்டுள்ளது.
Royal Enfield Meteor 350 varaints
மீட்டியோர் 350 ஃபயர்பால் : தொடக்கநிலை ஃபயர்பால் வேரியண்டில் அடிப்படையான வசதிகளில் ஒற்றை நிறம் பெற்ற டேங்க், கருமை நிற பாகங்கள், பாடி கிராபிக்ஸ் உடன் டிகெல்ஸ், கருமை நிற என்ஜின் உடன் மெசின்டு ஃபின்ஸ் பெற்றுள்ளது. இந்த வேரியண்டில் கருப்பு, மேட் க்ரீன், சிவப்பு மற்றும் நீலம் என நான்கு நிறங்களில் உள்ளது.
மீட்டியோர் 350 ஃபயர்பால் ஆன்-ரோடு விலை – ரூ.2,34,327
மீட்டியோர் 350 ஸ்டெல்லர் : ஸ்டெல்லரில் டிரிப்பர் நேவிகேஷன், பாடி கலரில் மற்ற பாகங்கள், குரோம் பூச்சு பெற்ற புகைப்போக்கி, இஎஃப்ஐ கவர், ஹேண்டில் பார், பின்புற பேக் ரெஸ்ட், பிரீமியம் பேட்ஜிங் போன்றவற்றை கொண்டிருக்கும். இந்த மாடலில் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று நிறங்கள் உள்ளது.
மீட்டியோர் 350 ஸ்டெல்லர் ஆன்-ரோடு விலை – ரூ.2,45,110
மீட்டியோர் 350 அரோரா: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரோரா வேரியண்டில் எல்இடி ஹெட்லைட், வைசர் மற்றும் பில்லியன் பேக்ரெஸ்ட், டிரிப்பர் நேவிகேஷன், அலுமினியம் சுவிட்சு க்யூப்ஸ் உடன் கூடுதலாக, குரோம் ஃபினிஷ் பெற்ற எக்ஸாஸ்ட், மிரர், ஃப்யூவல் டேங்க் பேட்ஜ்கள் மற்றும் என்ஜின் கேசிங் பெற்றுள்ளது. ஸ்போக் வீல் உடன் டீயூப் டயர் பெற்ற ஒரே வகையாகும். அரோரா மாடல் நீலம், கருப்பு மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் வழங்கப்படுகிறது.
மீட்டியோர் 350 அரோரா ஆன்-ரோடு விலை – ரூ.2,49,627
மீட்டியோர் 350 சூப்பர் நோவா : டாப் மாடலாக விளங்குகின்ற சூப்பர் நோவாவில் நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு டூயல் டோன் வண்ண நிறங்கள், எல்இடி ஹெட்லைட், அலுமினியம் சுவிட்சு க்யூப்ஸ் டிரிப்பர் நேவிகேஷன், மெசின்டு வீல்ஸ், வீண்ட் ஸ்கீரின், குரோம் இன்டிகேட்டர்ஸ், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கின்றது.
மீட்டியோர் 350 சூப்பர் நோவா விலை – ரூ.2,60,354
(All on-road price in TamilNadu)
மீட்டியோர் 350 மாடலில் இடம்பெற்றுள்ள ஜே சீரிஸ் லாங் ஸ்ட்ரோக் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 bhp பவரையும், 27 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.