RV 400 பைக்கில் ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் பெறும் மாடலில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், மணிக்கு 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணிக்கவும், மற்றும் மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்கலாம் என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.
Revolt RV400
இந்நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீசர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் டீசரில் எவ்விதமான உறுதியான தகவலும் இல்லை.
ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிறப்பான கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ள இந்த மாடல் சிறப்பான ஸ்போர்ட்டிவ் நேக்டு ஸ்டீரிட் பைக் தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.
தற்பொழுது ஃபிளிப்கார்டிலும் ரிவோல்ட் ஆர்வி 400 பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் ரூ. 23,000 சலுகை வழங்கப்படுகின்றது.
ரிவோல்ட் RV400 பைக்கின் விலை ரூ.1,38,950 ஆகும்.