Categories: Bike News

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஸ்போக் வீல் விற்பனைக்கு வந்தது

 KTM 390 Adventure with spoked wheels

இந்திய சந்தையில் அட்வென்ச்சர ரக ஸ்டைலை பெற்ற 2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் ஸ்போக் வீல் மற்றும் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் கொண்டதாக விற்பனைக்கு ₹ 3.60 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்போக் வீல் வேரியண்ட் மற்ற மாடலை போலவே அமைந்திருந்தாலும் 19-/17 அங்குல ஸ்போக் வீல் வழங்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக குறைந்த விலை 390 அட்வென்ச்சர் X அறிமுகம் செய்யப்பட்டது.

2023 KTM 390 Adventure

390 அட்வென்ச்சர் பைக்கில் தொடர்ந்து  373.2cc லிக்யூடு-கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டு 43.5 hp குதிரைத்திறன் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.

மற்ற அம்சங்களில், 19-இன்ச் முன்புற ஸ்போக் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற ஸ்போக் வீல், முன்புறத்தில் WP அபெக்ஸ் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டுக்கு ஒவ்வொன்றும் 30 கிளிக்குகள் உள்ளது.  பின்புறத்தில் WP அபெக்ஸ் மோனோ-ஷாக் ஆனது 10 ஸ்டெப் முறையில் ரைடருக்கு ஏற்ப சரிசெய்யக்கூடியதாக விளங்குகின்றது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் 3D IMU (Inertial Measurement Unit), க்விக்‌ஷிஃப்டர்+, கார்னரிங் ABS, ரைடிங் மோடுகள் (ஸ்ட்ரீட் & ஆஃப்ரோட்), ஆஃப்ரோடு ABS, ரைடு-பை-வயர் டெக், எல்இடி ஹெட்லேம்ப், இழுவைக் கட்டுப்பாடு. , சைட் மவுண்டட் எக்ஸாஸ்ட் சிஸ்டம், 46 மிமீ த்ரோட்டில் பாடி, ஸ்லிப்பர் கிளட்ச், ஐந்து இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஆகியவற்றை பெற்றுள்ளது.

2023 KTM 390 Adventure X – ₹ 2.80 லட்சம்

2023 KTM 390 Adventure STD – ₹ 3.38 லட்சம்

2023 KTM 390 Adventure Spoke- ₹ 3.60 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)