அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 200 டியூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட் பெற்ற மாடல் டீலர்களை வந்தடைய துவங்கியுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.5,000 வரை விலை உயர்த்தப்படலாம்.
250 டியூக் மற்றும் 390 டியூக் பைக்குகளில் உள்ளதை போன்ற ஹெட்லைட் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி தோற்ற ஆமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை.
2023 KTM 200 Duke
BS6 2 ஆம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணக்கமான OBD2 மற்றும் E20 உடன் டியூக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 200cc லிக்விட்-கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 25 hp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. மேலும், டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.
முந்தைய ஹாலஜென் ஹெட்லைட்டிற்கு பதிலாக, எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கூடுதலாக புதிய நிறங்களை பற வாய்ப்புகள் உள்ளது.
2023 கேடிஎம் 200 டியூக் விலை ரூ.1.98 லட்சத்திற்குள் அமையலாம்.
image source – miraj_acharya