இந்திய சந்தையில் நடைமுறைக்கு வந்துள்ள OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் புதிய நிறங்களுடன் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் ₹ 3,43,000 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை விட விலை ரூ.6,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நின்ஜா 300 பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் பிஎம்டபிள்யூ G 310 RR, கேடிஎம் RC390, டிவிஎஸ் அப்பாச்சி RR310 மற்றும் கீவே K300 R ஆகிய மாடல்கள் உள்ளன.
2023 Kawasaki Ninja 300
விற்பனைக்கு வந்துள்ள நின்ஜா 300 பைக்கின் 2023 ஆம் ஆண்டு மாடலில் மூன்று புதிய நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரேஸ் மாடல்களை போன்ற கருப்பு, சிவப்பு கிராபிக்ஸ் பெற்ற லைம் கிரீன் (KRT Edition), கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே ஆகிய இரண்டும் புதிய கிராபிக்ஸ் மற்றும் டூயல் டோன் ஆகியவற்றை பெற்றுள்ளது.
என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை, தொடர்ந்து நிஞ்ஜா 300 மோட்டார்சைக்கிள் 38.4 bhp மற்றும் 26.1 Nm வெளிப்படுத்துகின்ற 296cc லிக்விட் கூல்டு, பேரலல்-ட்வின் என்ஜின் பெற்று ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹாலஜென் வகை இரு பிரிவுகளை பெற்ற ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டூய்ல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய நிஞ்ஜா 300 பைக்கிற்க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. மேலும் டெலிவரி ஜூன் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.