ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் லிவோ 110 பைக்கின் மேம்பட்ட 2023 மாடல் OBD2 மற்றும் E20 மேம்பாடு கொண்ட என்ஜின் பெற்ற மாடல் விலை ரூ. 81,200 முதல் ரூ. 85,200 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஹோண்டா பைக் நிறுவனம் SP160 , சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்திருந்த நிலையில் 110சிசி என்ஜின் வரிசையில் அடுத்த மாடலாக லிவோ வெளியிடப்பட்டுள்ளது.
2023 Honda Livo
சிடி 110 டீரிம் டீலக்ஸ் பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பிரேக் மற்றும் பின் பக்க டயரில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்தாக, 80/100-18 M/C 47P டீயூப்லெஸ் டயர் இரு பக்கமும் கொண்டுள்ளது. டைமண்ட் வகை சேஸ் கொண்ட ஹோண்டா லிவோ 110 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.
புளூ மெட்டாலிக், மேட் க்ரஸ்ட் மெட்டாலிக் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த பாடிவொர்க் மாறாமல் இருந்தாலும், எரிபொருள் டேங்க் மற்றும் ஹெட்லேம்ப் கவுல் ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மட்டும் கொண்டுள்ளது.
2023 ஹோண்டா லிவோ 110 டிரம் ரூ. 81,200 மற்றும் லிவோ 110 டிஸ்க் ரூ.85,200 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆரம்ப விலையில் கிடைக்கும். புதிய லிவோ பைக்கிற்கு HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.