ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கில் பல்வேறு மாற்றங்களை வழங்கி டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
150cc-450cc வரை பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை பிரீமியம் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஹார்லி-டேவிட்சன் பைக், ஹீரோ கரிஸ்மா XMR 210, எக்ஸ்ட்ரீம் 200S 4V, மற்றும் எக்ஸ்ட்ரீம் 160 R, எக்ஸ்ட்ரீம் 200 R ஆகியவை விற்பனைக்கு வரவுள்ளது.
2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V
விற்பனையில் உள்ள மாடலை விட மிக சிறப்பான வெளிச்சதை வழங்கும் வகையில் எக்ஸ்பல்ஸ் 200 4V புதிய எல்இடி ஹெட்லேம்ப் H வடிவத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு உயரமான விண்ட்ஸ்கிரீன் மாற்றங்கள் உள்ளது.
மேலும், புதிய ஹெட்லேம்ப் லோ பீம், ஹைபீம் மற்றும் ஃபிளாஷர் மூன்று வெவ்வேறு செயல்பாட்டு முறைகளைக் கொண்டிருக்கின்றது. இதற்காக ஹெட்லேம்பினை இயக்க புதுப்பிக்கப்பட்ட சுவிட்ச் கியர் வழங்கப்பட்டுள்ளது. இரு நிற கலவையை கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் ஹேண்ட் நக்கிள் கார்டுகளை பெற்றுள்ளது.
ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்ற சிங்கிள சேனல் ஏபிஎஸ் கொண்டு வந்துள்ளது. மிக சிறப்பான ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு பயண அனுபவத்தை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 வழங்கும்.
BS6-2 இணக்கமான மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையிலான 200cc என்ஜின் பெற்ற அதிகபட்சமாக 8500rpm-ல் 19.1 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.
டீலர்களை வந்தடைந்துள்ள புதிய ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கின் விலை விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.5000 வரை உயர்த்தப்படும் என்பதனால், 2023 மாடல் ₹ 1.44 லட்சம் விலைக்குள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வரும் மே மாத இறுதியில் பேஷன் பிளஸ் உட்பட பல்வேறு மாடல்கள் ஹீரோ வெளியிடலாம்.
Prices (Ex-showroom, Delhi)
Base -₹ 1,43,516
Pro -₹ 1,50,891
மேலும் படிக்க – 8 ஹீரோ பைக்குகள் வருகை விபரம்