ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேம்பட்ட கனெக்ட்டே வசதிகளை பெற்ற பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் புதிய நிறங்கள், SOS எச்சரிக்கை, வாகன இருப்பிடம் அறிதல் மற்றும் ரிமோட் இம்மொபைல்ஸர் ஆகியவற்றை ஹீரோ கனக்டேட் வசதியுடன் பெற உள்ளது.
மற்றபடி, பிளெஷர் பிளஸ் 110 என்ஜின் ஆப்ஷன், வசதிகள் மற்றும் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இருக்காது. தொடர்ந்து 110cc சந்தையில் உள்ள ஆக்டிவா, ஜூபிடர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
2023 Hero Pleasure Plus Xtech
110cc பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரில் 110.9 cc என்ஜின் xens நுட்பத்துடன் பவர் 8 bhp @ 7250 rpm மற்றும் டார்க் 8.70 Nm @ 5750 rpm வெளிப்படுத்துவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.
இந்த ஸ்கூட்டரில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த Xtech அம்சத்தை கொண்டு அவசர கால எச்சரிக்கை, வாகன இருப்பிடம் அறிதல் மற்றும் ரிமோட் இம்மொபைல்ஸர் உட்பட ஸ்டைலிஷான டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர் , ஓடோ மீட்டர், எரிபொருள் அளவு, மற்றும் சைடு ஸ்டேன்டு இன்டிகேட்டர் போன்றவை உள்ளது. அடுத்தப்படியாக யூஎஸ்பி சார்ஜர் மற்றும் க்ளோவ்பாக்ஸ் போன்றவற்றை பிளஷர் ப்ளஸ் பெற்றதாக வந்துள்ளது. இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக உள்ளது.
2023 ஹீரோ பிளெஷர் பிளஸ் விலை ரூ. 67,798 முதல் ரூ.82,198 வரை உள்ளது.