பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 என இரண்டு மாடல்களையும் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படுதவனை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது.
மிக விரைவில் பல்சர் NS160 மற்றும் NS200 கணிசமான புதிய வசதிகளுடன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் USD ஃபோர்க் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்களை பெற்ற டீசரை வெளியிட்டுள்ளது. அனேகமாக யூஎஸ்டி ஃபோர்க் ஆனது என்எஸ் 200 மாடல் பெற்றிக்கும்.
2023 Bajaj Pulsar NS200
தற்போது, பல்சர் NS200 மற்றும் NS160 பைக்கிற்கான பிரேக்கிங் சிஸ்டத்தை பொறுத்தவரை 300மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 230மிமீ டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கின்றது. மேலும், இரண்டு பைக்குகளும் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் அப்சார்பரை பெற்றிருக்கின்றது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வாயிலாக 33 மிமீ அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் தொடர்பான அம்சங்களை வெளியிட்டுள்ளது. எனவே, இரு மாடல்களும் புதிய நிறங்களை கூடுதலாக பெறக்கூடும். மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களையும் பெற வாய்ப்பில்லை. புதிய என்ஜின் OBD-2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படிருக்கும்.
NS160 பைக்கில் 17.03 bhp பவர் மற்றும் டார்க் 14.6 Nm வெளிப்படுத்தும் 160.3cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக., NS200 பைக்கில் 24.13 bhp பவர் மற்றும் டார்க் 18.74 Nm வெளிப்படுத்தும் 199.5cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
2023 பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக் விலை ரூ.8,000 வரை உயர்த்தப்பட்டலாம்.