நடப்பு ஜனவரி மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் உட்பட, புதிய நிறங்கள் மற்றும் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்பாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஹிமாலயனின் பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் இடம்பெறுவதற்கான கிளஸ்ட்டர் உள்ள படங்கள் வெளியான நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் ஜனவரி 21 ஆம் தேதி புதிய ஹிமாலயன் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது.
டிரிப்பர் நேவிகேஷன்
சமீபத்தில் வெளியான மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற்றிருந்த ஸ்மார்ட்போன் மூலமாக ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் கூகுள் நிறுவனத்தின் ஆதரவில் வடிவமைக்கப்பட்ட டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அமைப்பினை பெற்றிருக்கும்.
மற்றபடி, பிஎஸ்-6 இன்ஜின் மாற்றத்தில் எந்த மாற்றங்ளும் இருக்க வாய்ப்பில்லை. 23.5 ஹெச்பி பவர் மற்றும் டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
கூடுதல் நிறங்கள், தற்போது கிடைத்து வருகின்ற நீக்கப்படலாம் என சில தகவல்கள் குறிப்பிடும் நிலையில், புதிதாக வெள்ளை நிறம், கருப்பு உட்பட புதிய பைன் க்ரீன் நிறம் என மூன்று நிறங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக டிசைனில், உயரமான ரைடர்களின் காலின் முட்டி பகுதி பெட்ரோல் டேங்க் அருகே கொடுக்கப்பட்டுள்ள மெட்டல் ஃபிரேமில் மோதுவதாக பெறப்பட்ட குறையை களைவதற்கான நோக்கில் இந்த ஃபிரேம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட 2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன், தற்போதைய ரூ.1.91-ரூ.1.96 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையை விட சற்று கூடுதலாக துவங்கலாம்.