கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் புனே ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட RC 200 ஃபேரிங் பைக் படம் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது. முன்பே ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்ட படங்கள் வெளியான நிலையில் இந்த புதிய படங்கள் கிடைத்துள்ளது.
புதிய தலைமுறை ஆர்சி 200 பைக்கில் 199.5 சிசி ஒற்றை சிலிண்டர் திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் பொருத்தப்பட்டு 10,000 ஆர்பிஎம்-ல் 24.6 பிஹெச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 19.2 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது, மேலும், இதில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் வருகின்றது.
KTM RC8 சூப்பர் பைக்கின் தோற்ற உந்துதலை பெற்றுள்ள ஆர்சி200 பைக்கின் புராஜெக்டர் ஹெட்லைட்டுக்கு மாற்றாக ஹாலஜென் ஹெட்லைம்ப் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு , மிரர் மூலமாக எல்இடி டரன் இன்டிகேட்டர் உள்ளது.
ஸ்போர்ட்டிவான ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ஸ்மாரட்போன் கனெக்ட்டிவிட்டி இணைக்கப்பட்டிருக்கலாம். தற்போது விற்பனையில் உள்ள கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் விலை ரூ.2.01 லட்சம் (எக்ஸ்ஷோரூம்). எனவே, புதிய மாடல் சற்று கூடுதலாக அமைந்திருக்கும்.