அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் விலை மற்றும் நுட்ப விபரங்கள் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
2018 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக வரவுள்ள பிஎஸ்-6 நின்ஜா 300 பைக்கின் அதிகப்படியான பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க துவங்கியுள்ளதால் விலை மிகவும் சவாலாக அமைய வாய்ப்புள்ளது.
புதிதாக வெளிவந்துள்ள படங்களின் மூலம் நின்ஜா 300 மாடலின் ஸ்டைலிங் அம்சங்கள் உட்பட பேனல்களின் டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை. புதிதாக இணைக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, பிஎஸ்-6 296சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியாகவில்லை.
முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள இந்த பைக்கில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கும்.