ரெட்ரோ ஸ்டைலை பெற்ற க்ரூஸர் ரக மாடலான யமஹா போல்ட் பைக்கினை முதற்கட்டமாக ஜப்பானில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விற்பனைக்குச் செல்ல உள்ள போல்ட் பைக்கின் இந்தியா வருகைக்கு வாய்ப்பில்லை.
54 ஹெச்பி பவரை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்கும் 941 சிசி வி-ட்வீன் ஏர் கூல்டு சிலிண்டர் என்ஜின் பெற்று 4 வால்வுகளை ஒவ்வொரு சிலிண்டருக்கு கொண்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக 80 என்எம் டார்க்கினை 3,000 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்துகின்றது. பெல்ட் டிரைவ் மூலம் பவரை எடுத்துச் செல்கின்ற இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
டபுள் கார்டில் ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டு ரெட்ரோ ஸ்டைல் பாபர் ரக மாடல்களின் தாக்கத்தை அதிகம் கொண்டுள்ள இந்த பைக்கில், வட்ட வடிவ ஹெட்லைட், எல்இடி டையில் லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. மேலும் இந்த மாடலில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு, இரு பக்க டயர்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு மற்றும் ஆர் என இரண்டு விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது.
யமஹா போல்ட் ஜப்பான் விலை பட்டியல்
– 2020 யமஹா Bolt ABS: 979,000 யென் (ரூ. 6.95 லட்சம் தோராயமாக)
– 2020 யமஹா Bolt R ABS: 1,025,200 யென் (ரூ. 7.28 லட்சம் தோராயமாக)