சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பவர்ஃபுல்லான ஹயபுஸா பைக்கின் பிஎஸ்4 மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. தன்டர் கிரே மற்றும் டேரிங் ரெட் என இரு நிறங்களை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹயபுஸா பைக், முந்தைய மாடலில் மாற்றம் இல்லாமல் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த 1340 சிசி இடபெயர்வு கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 199.7 hp பவர் மற்றும் 155 Nm டார்க் பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள குருகான் ஆலையில் சுசுகி ஹயபுஸா பைக் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய நிறத்தை தவிர கூடுதலாக முன்புற பிரேக் காலிப்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2019 சுசுகி ஹயபுஸா பைக் விலை ரூ. 13.75 லட்சம் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎஸ்4 மாடலை ஜனவரி 20 ஆம் தேதி முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.