க்ரூஸர் ரக சந்தையில் மிகவும் ஸ்டைலிஷான சுஸூகி இன்ட்ரூடர் பைக்கில் புதிய நிறம், புதுப்பிக்கப்பட்ட பிரேக் பெடல் மற்றும் கியர் ஷிஃப்ட் லிவர் மாற்றத்துடன் ரூ.1.08 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
இன்ட்ரூடர் பைக்கின் விற்பனை வந்த சில மாதங்களில் சரிவை சந்திக்க தொடங்கிய நிலையில், கடந்த ஜனவரி, பிப்ரவரி 2019 மாதங்களில் விற்பனை செய்யப்படாத நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியாகியுள்ளது.
சுஸூகி இன்ட்ரூடர் பைக்கின் சிறப்புகள்
இந்த மாடலில் புராஜெக்டர் எல்.இ.டி முகப்பு விளக்கு ,எல்.இ.டி டெயில் விளக்கு பெற்றிருப்பதுடன் பிரிமியம் தோற்ற பொலிவினை கொண்டுள்ளது. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 740 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ள இந்த மாடல் பெரும்பாலான மக்களுக்கு ஏற்ற வகையிலும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கின்றது.
அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம் சுழற்சியில் 14.8 HP பவரையும் மற்றும் 6000 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 14 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. புதிய 2019 இன்ட்ரூடர் மாடலில் மெட்டாலிக் மேட் டைட்டானியம் சிலவர் நிறம், பிரேக் பெடல் அமைப்பில் மாற்றம் மற்றும் கியர் ஷிஃப்ட் லிவரில் சிறிய மாற்றத்தை தந்துள்ளது. ஒற்றை சேனல் ஏபிஎஸ் பிரேக்கினை நிரந்தரமாக இந்த பைக் பெற்றுள்ளது.