முந்தைய மாடலை விட கூடுதல் பவரை வெளிப்படுத்தும் MY20 கவாஸாகி நின்ஜா ZX-10R பைக்கில் 203 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது. இந்தியாவில் உள்ள கவாஸாகி ஆலையில் சிகேடி முறையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
கடந்த மாதம் முதல் ரூ.1.50 லட்சம் செலுத்தி முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நின்ஜா ZX-10R பைக்கிற்கான முன்பதிவு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் நடைபெறும் என்பதனால் மே மாத இறுதியில் நிறைவடைய உள்ளது. டெலிவரி ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
கவாஸாகி நின்ஜா ZX-10R சிறப்புகள்
அட்வான்ஸடு நுட்பங்களை பெற்ற 2019 ஆம் ஆண்டின் மாடல் முந்தைய மாடலை விட பவர் 3 பிஎஸ் வரை அதிகரிக்கப்பட்டு தற்போது 203hp பவர் மற்றும் ரேம் ஏர்டேக் சமயத்தில் 210 ஹெச்பி வரை வெளிப்படுத்தும் 998 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஃபிங்கர் போலோவயர் வால்வு ஆக்வேஷன் (Finger follower valve actuation), க்விக் ஷிஃப்டர் டூயல் டைரக்ஷன் போன்றவற்றுடன் சிவப்பு நிற என்ஜின் ஹெட் கவர் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் ஸ்டைலிங் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
43 மிமீ Showa இன்வெர்டெட் ஃபோர்க் பெற்று 120mm வரை பயணிக்கும் திறன், அட்ஜெஸ்டபிள் கேஸ் சார்ஜடு 114mm வரை பயணிக்கும் மோனோ ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 330 மிமீ செமி ஃபுளோட்டிங் பிரெம்போ டூயல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
கவாஸாகி நின்ஜா ZX-10R பைக் விலை ரூபாய் 13.99 லட்சம் (டெல்லி விற்பனையக விலை)