₹ 9.99 லட்சம் விலையில் கவாஸகி நிஞ்ஜா 1000 சூப்பர் பைக் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தை மாடலின் விலையில் மாற்றமில்லாமல் கூடுதல் வசதிகளை பெற்றுள்ள நிஞ்சா 1000 பைக்கிற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
கவாஸகி நிஞ்ஜா 1000
கருப்பு மற்றும் பச்சை என இரு நிறங்களில் விற்பனைக்கு கிடைக தொடங்கியுள்ள கவாஸகி நிஞ்ஜா 1000 பைக்கில் சில குறிப்பிடதக்க தோற்ற மாற்றங்கள் மற்றுஇம் வசதிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒரு சில பாகங்களை தருவித்து ஒருங்கினைக்கப்படுகின்ற (semi-knocked down- SKD ) முறையில் புனே அருகேயுள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது.
கவாஸாகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற உயர் ரக நிஞ்சா H2 மற்றும் ZX-10R போன்ற மாடல்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் 142 PS பவர், 111 NM டார்க்கினை வழங்கும் 1043cc எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப்பர் கிளட்ச் அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
கவாஸகி நிஞ்சா 1000 பைக் விலை ₹ 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)