ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள, ஸ்டைலிஷான புதிய ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக் ஃபேரிங் செய்யப்பட்ட ஸ்போர்ட்டிவ் மாடலாக வெளியாகியுள்ளது. CBR400R பைக் முந்தைய ஹோண்டா CBR500R அடிப்படையாக கொண்டுள்ளது.
சந்தையில் உள்ள சிபிஆர்400ஆர் பைக்கின் டிசைன் அம்சம் பெரும்பாலான பாகங்கள் CBR500R மாடலில் இருந்து பெறப்பட்டு முழுமையான எல்இடி லைட்டிங் கொண்டு கவர்ச்சிகரமான மூன்று நிறங்களை பெற்றுள்ளது.
கிராண்ட் பிரிக்ஸ் சிவப்பு, பியர்ல் கிளார் வெள்ளை மற்றும் மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது. இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் கொண்டுள்ளது.
மிக நேர்த்தியான கட்டுமானத்தை வெளிப்படுத்துகின்ற இந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 399சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 46 ஹெச்பி திறனையும் மற்றும் 38Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது. மேலும், இந்த பைக்கில் 17 லிட்டர் பெட்ரோல் பிடிக்கும் அளிவிற்கு டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. 192 கிலோ எடையுள்ள, சிபிஆர்300ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 41 கிமீ தரும் திறனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக் விற்பனைக்கு வெளியாகுவது குறித்து எந்த தகவலும் இல்லை. ஜப்பான் நாட்டில் மாரச் மாதம் முதல் ஹோண்டா CBR400R பைக் விலை 7,93,800 யென் (ரூ. 5.16 லட்சம்) கிடைக்கின்றது.