ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. வரும் 5ம் தேதி புதிய EICMA ஷோவில் S1000RR மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், S1000RR ஸ்பெக் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
இந்த புதிய மோட்டார் சைக்கிள்களில் விஷ்வல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹெட்லைட்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2019 BMW S1000RR-ல் பிஎம்டபிள்யூ சின்னேச்சர் ப்ளூ, ரெட் மற்றும் ஒயிட் கலர் ஸ்கீமில் வெளியாக உள்ளது. இந்த மோட்டர் சைக்கிள் 197 kg எடை கொண்டதாக இருக்கும். எம் பேக்கேஜ்-ல் 3 kg குறைவாக இருக்கும்.
2019 BMW S1000RR மோட்டார் சைக்கிள்களில் ABS உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும் இதில் மழை, ரோடு, டைனமிக் மற்றும் ரேஸ் என நான்கு டிரைவிங் மோடுகள் உள்ளன. மேலும் டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல்,ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் அசிஸ்ட் புரோ ஆகியவை வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளன. மேலும் முழு கலரில் TFT டிஸ்பிளே கொண்ட இன்ஸ்டுரூமென்ட் கல்ச்சர் கொண்டிருக்கும்.
புதிய 2019 BMW S1000RR-கள் 999cc லிகியுட் கூல்டு இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின்களுடன் 207bhp மற்றும் 113Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களின் டாப் ஸ்பீட் 299 km/hr ஆக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்கள் வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.